மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்னைக் கொஞ்சம் பேச விடுங்க" மேடையில் கெஞ்சிய ப்ரியாமணி.!
அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் "ஜவான்". இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ப்ரியாமணி மேடையில் பேசும்போது, "இசையமைப்பாளர் அனிருத் தற்போது மிகப்பெரிய படங்களுக்கெல்லாம் இசையமைத்து வருகிறார். முன்னதாக ஜெயிலர், தற்போது ஜவான், அடுத்ததாக லியோ படம் அனிருத் இசையில் வெளிவர உள்ளது" என்று ப்ரியாமணி கூறினார்.
அப்போது ரசிகர்கள் லியோ என்று சொன்னதும், அரங்கமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்தனர். உடனே ப்ரியாமணி, "என்னைக் கொஞ்சம் பேச விடுங்க" என்று கூறியும், ரசிகர்களின் ஆரவாரம் அடங்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜவான் படத்தின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தது போல், லியோ படத்தின் பாடல்களும் பெரும் வெற்றி பெறும் என்று தெரிகிறது.