மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் வீட்டு குட்டி தேவதையுடன் செம கியூட்டாக தொகுப்பாளினி பிரியங்கா.! அட.. நல்லா வளந்துட்டாங்களே! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஏராளமான பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் நிகழ்ச்சி அனைத்தையும் கலகலப்பாக தொகுத்து வழங்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பிரியங்கா விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்தும் அவர் தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா தற்போது தம்பி மற்றும் அம்மாவுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ப்ரியங்கா தம்பிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகிய பெண்குழந்தை பிறந்தது. அதனை பிரியங்கா மிகவும் ஹேப்பியாக பகிர்ந்திருந்தார். மேலும் தனது தம்பி மகளுடன் நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் அண்மையில் குழந்தையுடன் செய்தித்தாள் படிப்பது போன்று போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அது வைரலாகி வருகிறது.