மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரியங்கா சோப்ராவின் உள்ளாடையை பார்க்க விரும்பிய இயக்குனர்...! அதன் பிறகு நடந்தது என்ன.?
இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பாலிவுட்ல ஷாருக்கான் சல்மான் கான் அக்ஷய் குமார், ஹிர்திக் ரோஷன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர்.
இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் சினிமாவிலும் தடம் பதித்த இவர் பாப் இசை பாடகரான நிக் ஜோனா செய்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவரது நடிப்பில் தற்போது சிட்டாடல் என்ற இணையதளத் தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.
சமீபத்தில் இவர் தி ஷோ என்ற பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா வாழ்க்கையில் ஆரம்பத்தில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆண் ஒருவரை மயக்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக இவர் ஒரு ஆடையை கழற்ற வேண்டும். அதற்கு இப்ப பிரியங்கா சோப்ரா ஒரு ஆடையை எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படத்தின் இயக்குனர் இந்த ஆடை வேண்டாம் அவர் உள்ளாடை அணிய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அப்போதுதான் அந்த காட்சியை அனைவரும் பார்ப்பார்கள் என அவரது ஒப்பனையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பிரியங்கா சோப்ரா கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். மேலும் அந்த திரைப்படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார். அந்தத் திரைப்படத்திற்காக தனக்கு செலவழிக்கப்பட்ட தொகையையும் தயாரிப்பு நிறுவனத்திடம் திருப்பி வழங்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் வெளியான இரண்டு வெப் சீரிஸ்களும் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.