ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
"பருத்திவீரன் சர்ச்சையால் கடும் வருத்தத்தில் இருக்கும் தயாரிப்பாளர் தாணு!" என்ன காரணம்.?
2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி நடித்து வெளியான திரைப்படம் "பருத்திவீரன்". இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இதுவே இவர் தயாரித்த முதல் படமாகும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர், "பருத்திவீரன் 2.75கோடியில் எடுக்க வேண்டிய படம். ஆனால் அமீர் என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு அதுவே முதல் படம் என்பதால் எனக்கு சினிமாவைப் பற்றி அப்போது தெரியவில்லை. அமீர் உழைத்து உண்ணாமல் மற்றவர்களிடம் திருடி உண்கிறார்" என்று கடுமையாக சாடியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமீரும், ஞானவேல் கூறுவதில் உண்மையில்லை என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உட்பட பலரும் அமீருக்கு ஆதரவாகக் களமிறங்கிய நிலையில், தற்போது "வாடிவாசல்" படத் தயாரிப்பாளர் தாணு கடும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் அமீரும் நடிப்பதாக செய்திகள் வெளியானது. தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த பருத்திவீரன் பஞ்சாயத்தால் தாமதமாகிறது என்று தயாரிப்பாளர் தாணு வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.