மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. எனக்கும், மஹாலட்சுமிக்கும் 20 வயசு வித்தியாசமா?? என் உண்மையான வயசே இவ்வளவுதாங்க! ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்தர்!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது கேரியரை தொடங்கி, பின் சன் டிவியில் அரசி என்ற தொடரில் நடித்ததன் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தவர் மஹாலகட்சுமி. அதனை தொடர்ந்து அவர் பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் வில்லி, ஹீரோயின் என பல ரோல்களிலும் நடித்துள்ளார். நடிகை மஹாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவர் கணவரை விவாகரத்து செய்தார்.
அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துவந்த அவர் அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்துள்ளார். ரவீந்தர் தயாரிப்பாளராக மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் டிவி நிகழ்ச்சிகள், அதன் போட்டியாளர்கள் குறித்த விமர்சனங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர். நடிகை மஹாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமண புகைப்படங்கள் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறினர். மேலும் சிலர் மோசமாக விமர்சனம் செய்தனர்.
மேலும் நடிகை மஹாலட்சுமிக்கும், ரவீந்தர்க்கும் 20 வயது வித்தியாசம் எனவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ரவீந்தர், நாங்கள் இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளோம். எனக்கு 52 வயதாகிவிட்டதாகவும், நான் மஹாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. உண்மையிலேயே எனக்கு 38 வயதுதான் ஆகிறது. எங்களுக்குள் அவ்வளவு பெரிய வயசு வித்தியாசமெல்லாம் இல்லை என கூறியுள்ளார்.