மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதைப் பத்தி எதுவும் பேச விரும்பலை... டாக்டர் பட தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும், கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தல், கொரோனா இரண்டாவது அலை என தொடர்ந்து பல காரணங்களால் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இந்நிலையில் இதுகுறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து படத்தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் படம் குறித்த அப்டேட்களை தொடர்ந்து கேட்டு வருகிறீர்கள். ஒரு தயாரிப்பாளராக முழுமையாக தயாரான ஒரு படத்தை கையில் வைத்துக் கொண்டு கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகளை தாங்கிக் கொண்டிருக்கிறேன். படம் நல்லபடியாக ரிலீஸாக என் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறேன்.
#Doctor #DoctorUpdate #StaySafe 🙏🏽 pic.twitter.com/FC1x0PJ4Kw
— KJR Studios (@kjr_studios) May 12, 2021
மேலும் கொரோனா இரண்டாவது அலையால் மிகவும் நெருக்கமான சுற்றத்தாரையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறோம். இது போன்ற சமயத்தில் டாக்டர்’ ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வீட்டில் பாதுகாப்பக இருந்து உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.