மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதிக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகள்! எச்சரிக்கை விடுத்த முக்கிய பிரபலம்!
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800ல் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இந்நிலையில் இதன் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதை கைவிட வேண்டுமென சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் விஜய் சேதுபதிக்கு எதிராக டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
இந்நிலையில் இதுகுறித்து பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறுகையில், எந்த நாட்டின் அணியை தமிழகத்திற்குள் அனுமதிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்தாரோ, அந்த நாட்டின் கொடியை நெஞ்சில் சுமந்து கொண்டு விஜய் சேதுபதி நடிப்பதை ஏற்றுகொள்ள முடியாது.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு போர் முடியும்நாள்தான் என் வாழ்க்கையின் சிறந்த நாள் என கூறியவர்தான் முத்தையா முரளிதரன். அவரது படத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி கைவிடவில்லை எனில் அவரது வீட்டையும், இயக்குனர் வீட்டையும் முற்றுகையிடுவோம். மேலும் இனி விஜய் சேதுபதி படங்கள் திரையிட முடியாத நிலையும் ஏற்படும். விஜய்சேதுபதி வரலாற்று பழியை சுமந்து விடக்கூடாது என கூறியுள்ளார்.