மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேவையா இதெல்லாம்! விஜய் போல சீன் காட்ட முயன்ற புகழுக்கு நேர்ந்த விபரீதம்! வைரலாகும் வீடியோ!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது. மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மஹேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் வேற லெவல். அப்பாடலுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வாத்தி கம்மிங் பாடலில் துவக்கத்தில் விஜய் சோபாவில் படுத்திருக்க, அவரை அப்படியே சோபாவோடு மாணவர்கள் தூக்கி வருவார்கள். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமான புகழும் அவரை போலவே செய்ய முயற்சி செய்து சோபாவில் இருந்து கீழே விழுந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் இதெல்லாம் தேவையா என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.