மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனது சொர்க்கம்..! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படம்! வாழ்த்தும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் நடன இயக்குனராக முன்னேறியவர் ராகவா லாரன்ஸ். இவர் பல முன்னணி நடிகர்களின் மெஹா ஹிட் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகராக களமிறங்கிய அவர் தனது திறமையான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டும் விளங்குகிறார்.
அதுமட்டுமின்றி அவர் ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளி குழந்தைகளுக்காக ஆசிரமம் தொடங்கி ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். மேலும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் வறுமையால் கஷ்டப்பட்டு வரும் பலருக்கும் அள்ளிக்கொடுத்து மனதார பல உதவிகளையும் செய்து வருகிறார்.
My heaven 🙏 pic.twitter.com/3CkgkfZfDt
— Raghava Lawrence (@offl_Lawrence) September 14, 2020
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது ஆசிரம குழந்தைகளுடன், சிரித்த முகத்துடன் மிகவும் உற்சாகமாக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, என்னுடைய சொர்க்கம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமும் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அந்த மனசுதான் கடவுள் என அவரை பாராட்டி வருகின்றனர்.