மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜா ராணி-2 இந்த சீரியலின் ரீமேக்கா.. வெளியான புதிய தகவல்.!
சமீப காலமாகவே விஜய் டிவியில் திரைப்படத்தின் பெயர்களை வைத்து சீரியல்களை உருவாக்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றனர். நாம் இருவர் நமக்கு இருவர், கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே மற்றும் பிரபலமாகி ஓடி முடிந்த ராஜா ராணி சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆல்யா மானசா மீண்டும் சீரியலில் களமிறங்கியுள்ளார். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஹீரோ சித்துவுடன் இணைந்து ராஜா ராணி - 2 சீரியலில் ஆல்யா மானசா நடிக்கவுள்ளார். தற்போது அந்த சீரியல் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ராஜா ராணி - 2 சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான என் கணவர் என் தோழன் சீரியலின் கதை என்று கூறப்படுகிறது. இந்தியில் பிரபலமான சீரியலில் ஒன்றாக கருதப்பட்ட தியா ஓர் பாதீ ஹம் என்ற சீரியலின் ரீமேக் தான்.
அந்த தொடரை அப்படியே தமிழில் டப் செய்து என் கணவர் என் தோழன் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். இந்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் 927 எபிசோட் வரை மட்டும் தான் ஒளிபரப்பபட்டது.பின்னர் அந்த தொடரை நிறுத்திவிட்டனர்.