மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜாராணி 2 மாமியார் இந்த பிரபல முன்னணி நடிகையின் நெருங்கிய உறவினரா? தீயாய் பரவும் புகைப்படம்! செம சர்பிரைஸில் ரசிகர்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரியமானவள் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரவீனா. அதனைத் தொடர்ந்து அவர் சன் டிவியில் மகராசி என்ற தொடரில் ஹீரோயினுக்கு மாமியாராக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய பிரவீனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவிற்கு அம்மாவாக ஆலியா மானசாவிற்கு ஸ்ரிக்ட் மாமியாராக நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் களமிறங்கிய அவர் நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமுடன் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை பிரவீனா, பிரபல முன்னணி நடிகை ஸ்ரீ வித்யாவின் நெருங்கிய உறவினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி,கமல் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து 80ஸ்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீவித்யா, பிரவீனா அவர்களுக்கு அத்தை உறவுமுறை என கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.