மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைச்ச மாவையே அரைக்கும் இயக்குனர் ராஜேஷ்.. இந்த முறை சிக்கிய நடிகர் இவரா?
தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது.
ஆனால் அதன் பிறகு இவர் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் படுதோல்வியை சந்தித்து வருகிறது. ஆனாலும் இயக்குனர் ராஜேஷ் தனது ஃபார்முலாவை மாற்றாமல் அதே போலவே இயக்கி வருகிறார்.
இதனிடையே நடிகை ஹன்சிகாவை வைத்து மை3 என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். ஆனால் அந்தத் தொடரும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் நடிகர் ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தனது காமெடி ஃபார்முலாவில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.