மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நடிகர் ரஜினி மறுபடியும் இந்த மாதிரி நடிக்கிறாரா? அண்ணாத்த பட சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்பொழுது அங்கு பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்பெல்லாம் தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், ராஜாதி ராஜா, தர்மதுரை, வீரா, மன்னன் போன்ற படங்களிளெல்லாம் காமெடியாக நடித்து வந்த ரஜினி தற்போதெல்லாம் பெரும்பாலும் ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் அண்ணாத்த படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் @rajinikanth ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும்
— Actor GeorgeMaryan (@GeorgeMaryanOff) April 15, 2021
இதுகுறித்து நகைச்சுவை நடிகர் ஜார்ஜ் மரியான் தனது டிவிட்டர் பக்கத்தில், அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும் எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.