தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
செம கெத்தாக வீடு திரும்பிய நடிகர் ரஜினி! ரசிகர்களுக்காக வெளியிட்ட ஆடியோ பதிவு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திடீரென கடந்த 28ம் தேதி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து சில வதந்திகளும் பரவி வந்தது. ஆனால் நடிகர் ரஜினி வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காகதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர், ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
Returned home 🙏 https://t.co/35VeiRDj7b
— Rajinikanth (@rajinikanth) October 31, 2021
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவரை குடும்பத்தினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், “அனைவருக்கும் வணக்கம், சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளேன். இரவு தான் வீடு திரும்பினேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" என ஹூட் செயலி மூலம் ஆடியோ வெளியிட்டுள்ளார்.