"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர்168 படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினி காந்த். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் பேட்ட பட வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான சும்மா கிழி பாடல் வெளியாகிய 18 மணி நேரத்திலேயே 6.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியானது. மேலும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகளை தேடும் பணியில் படக்குழு மும்முரமாக செயல் பட்டு வருகிறது.
அதில் முதலாவதாக காமெடி கதாபாத்திரத்திற்கான நடிகர் யார் என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பிரபல காமெடி நடிகர் சூரி நடிக்கவுள்ளார்.
#Thalaivar168 Update ! pic.twitter.com/CZw49nfUd8
— Sun Pictures (@sunpictures) November 28, 2019