மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா, மழை எவ்வளவு தடைகள்! ஆனாலும்.. பாட்ஷா பட டயலாக்குடன் நடிகர் ரஜினி வெளியிட்ட ஆடியோ.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த திரைப்படம் அண்ணாத்த. இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
ஆனாலும் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் நடிகர் ரஜினி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. படம் வெளியாகி நேற்றுடன் 50 நாட்களாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினி அண்ணாத்த பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு தங்கச் செயினை பரிசாக அளித்தார். மேலும் படப்பிடிப்பின் போது தான் சந்தித்த அனுபவங்களை ஹூட் ஆப்பில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, கொரோனா பரவல் உள்ளிட்ட பல தடைகளை கடந்து, இரு வருடங்களுக்கு மேலாக நிறைய சிரமங்களை சந்தித்து இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மேலும் படம் வெளியானதும் மழை வரதுவங்கியது. மேலும் எதிர்மறையான விமர்சனங்களும் அதிகளவில் வந்தது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து அண்ணாத்த படம் வெற்றி அடைந்துள்ளது.
மழை இல்லை என்றால் இந்த படம் இன்னும் பெரியளவில் வெற்றி அடைந்திருக்கும். இவற்றை பார்க்கும் போது பாட்ஷா படத்துக்கு நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. ‛‛ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். ஆனால் கெட்டவங்கள...'' என்று கூறி சிரித்துள்ளார்.