கண்ணா பயப்படாத.. தன் ரசிகரின் மகளுக்காக நடிகர் ரஜினி செய்த காரியம்! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!



rajini-video-call-to-unhealty-fan-daughter

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
 இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.

ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 71வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல பலரும்  வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே அவர் பெங்களூரைச் சேர்ந்த தனது ரசிகர் ஒருவரது மகள் சௌமியா உடல்நலக்குறைவால் அவதிப்படுவதை அறிந்து அவரை காணொளி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர் அந்த சிறுமியிடம், கண்ணா பயப்படாதே, தைரியமாக இரு. கொரோனாவால் என்னால் நேரில் வர முடியவில்லை என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் தலைவா.. உங்க மனசுக்கு நூறு வருஷம் நல்லா இருக்கணும் என கூறி வருகின்றனர்.