மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைவர் 171 படத்தின் வேற லெவல் அப்டேட்.. உண்மையை உடைத்த பிரபலம் .! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து "சூப்பர் ஸ்டார்" எனும் பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்லர். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
இப்படத்திற்குப் பின்பு தனது 170 ஆவது திரைப்படத்தை ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார். இதன் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171வது திரைப்படத்தை நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், இப்படத்தை பற்றிய சுவாரசியமான சில தகவல்களை டோப் மனோஜ் பரமஹம்சா என்பவர் கூறியுள்ளார். அவர், லோகேஷ் கனகராஜ் படத்தை பற்றி ஒரு லைனை தான் என்னிடம் கூறினார். இது குறித்து பார்க்கும் பொழுது ஒளிப்பதிவாளருக்கு சேலஞ்சாக இப்படம் இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் அதிகமான vfx காட்சிகளும் இதில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்தின் காம்போ எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.