மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பத்துடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை ஹேப்பியாக கொண்டாடிய நடிகர் ரஜினி.! வைரலாகும் புகைப்படம்!!
1950 டிசம்பர் 12 அன்று பெங்களூரில் பிறந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்வாட். இவருக்கு 5 வயதாக இருந்தபோது அவரது தாயார் ஜீஜாபாய் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ரஜினி கூலி தொழிலாளியாக பணியாற்ற வேண்டி இருந்தது.
அதனைத் தொடர்ந்து பஸ் கண்டக்டராக பணியாற்றிய அவர் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் பல முயற்சிக்குப் பிறகு 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். வில்லனாக அறிமுகமான அவர் பின்னர் பல படங்களில் நடித்து தற்போது சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமாவில் ராஜ்ஜியம் செய்து வருகிறார்.
அன்று தனது சினிமா பயணத்தை தொடங்கிய அவர் 48 ஆண்டுகளாக வெற்றிகரமாக இன்று வரை தொடர்ந்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை மனைவி, மகள்கள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.