மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மும்தாஜ் வெளியேறியதை குறித்து ஜாலியாக பதிவு போட்ட ரக்சிதா, என்ன சொன்னார் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நடித்தவர் நடிகை ரச்சிதா. இவர் அந்த சீரியலில் பல நடிகர்கள் மாறினாலும் கடைசி வரை மாறாமல் ஒரே நாயகியாக நடித்து வெற்றி பெற்றார்.
இவரது நடிப்புக்கு பல ரசிகர்கள் இருந்த நிலையில்,அவரை சிலர் கிண்டல் செய்து மீம்ஸ் ,ட்ரோல் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர் .
ஆனால் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,அனைத்து தடைகளையும் மீறி தொடர்ந்து சிறப்பாக நடித்து வந்தார்.
பின்னர் வெற்றிகரமாக சீரியல் முடிந்துவிட்ட நிலையில், அதில் நடித்தவர்கள் வேறொரு சீரியல், படங்கள் என கமிட்டாகி பிஸியாகிவிட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போதும் தனது கருத்தை பதிவு செய்யும் ரச்சிதா, மும்தாஜ் வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், நீண்டு வளர்ந்த மரங்கள் தான் முதலில் வெட்டப்படும், பிக்பாஸில் மட்டும் இல்லை எல்லா இடத்திலும் தான். உங்களுடைய குணத்தில் நீங்கள் தெளிவாக இருந்தீர்கள், இப்போது கொண்டாட வேண்டிய நேரம்.
உங்களை புரிந்து கொள்ளதவர்களுடன் இருப்பதற்கு பதிலாக வெளியே வந்து தீவிர ரசிகர்களை பாருங்கள், சிரித்துக் கொண்டு இருங்கள்.நீங்கள் ஏற்கெனவே வெற்றிப் பெற்று விட்டீர்கள் என பதிவு செய்துள்ளார்.