மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
60 வயது நடிகருடன் இதெல்லாம் தேவையா.. ரக்ஷிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் அதே டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடிக்கும்போது சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதில் திருமணமான அடுத்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.இதில் நடிகை ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். தற்போது ரக்ஷிதா தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கன்னடத்தில் 60 வயதாகும் நடிகர் ஜக்கேஷ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை ரக்ஷிதாவுக்கு கன்னடத்தில் இதுதான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனது முதல் படத்திலேயே 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.