மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! விஜய்டிவி ராமரின் படத்திற்கு இப்படியெல்லாம் ஒரு தலைப்பா? தலைசுற்றிப்போன ரசிகர்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராமர். இவரது பேச்சுக்கும், காமெடிக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் பேசிய என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக் மற்றும் ஆத்தாடி என்ன உடம்பீ என அவரது ஸ்டைலில் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ஹிட்டடித்தது .
இந்நிலையில் அவர் தற்போது சூப்பர் டாக்கீஸ் அவதார் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். மேலும் இப்படத்தை குறும்பட இயக்குனர் மணி ராம் இயக்குகிறார். ஐபிஸ் கே.தினேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கவுள்ளார்.
மேலும் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து படக்குழுவினர் இப்படத்திற்கு போடா முண்டம் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் ரசிகர்கள் இது என்ன தலைப்பு என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.