மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.! நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த பிரபல நடிகராம்..? யாருக்கும் தெரியாத ஆச்சர்யத் தகவல்..!
சினிமாவை பொறுத்தவரை ஒருசில நடிகைகள் ஒருசில படங்களிலையே பிரபலமாகிவிடுகிறார்கள். அந்த வகையில் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.
ஜோக்கர் படத்தை அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ரம்யா பாண்டியன். அதன்பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடரில் கலந்துகொண்டார்.
இந்த தொடர் இவரை மேலும் பிரபலமாக்கியது. இப்படி அடுத்தடுத்து பிரபலமாகிவரும் ரம்யா பாண்டியன் பிரபல தமிழ் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகலாம். ஆம், அண்மையில் ஒரு பங்சன் வீட்டில் எடுத்த புகைப்படத்தில் வித் சித்தப்பா என ரம்யா பாண்டியன் அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.