ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ப்பா.. பில்லா நயன்தாராவிற்கே போட்டியா! மாடர்ன் கிளாமர் உடையில் ரம்யா பாண்டியன்!! கிறங்கிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தின் மூலம் அவர் பெருமளவில் பிரபலமாகவில்லை. ஆனால் பின்னர் ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் புடவையில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களால் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்த ரம்யா பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான
ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அவரது கைவசம் தற்போது இடும்பன்காரி மற்றும் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்கள் உள்ளன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரம்யா தற்போது பிளாக் அண்ட் ஒயிட்டில் மாடர்ன் உடையில் செம கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.