மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடற்கரையில் ஹாயாக படுத்தபடி, மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ராணா! தீயாய் பரவும் புகைப்படம்!
உலகளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரமாண்ட திரைப்படமான பாகுபலியில் பல்வாள்தேவனாக வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராணா டகுபதி. இவர் தமிழில் நடிகர் அஜித்துடன் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி மற்றும் பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது காடன், மடை திறந்து உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழிலதிபருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவர்கள் தற்போது ஹனிமூன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருவரும் கடற்கரையில் ஹாயாக படுத்தபடி எடுத்த புகைப்படத்தை மீஹிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.