வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிக்க தடையா? உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன?



rani-verama-devi---sunny-leone

நடிகை சன்னி லியோன் ராணி வீரமாதேவி கதாபாத்திரத்தில் நடிக்க தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

தென்னிந்திய வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்சி செய்து வரலாற்றில் என்றுமே அழியாத நீங்க புகழோடு விளங்கும் வம்சம் சோழ வம்சம். இவ்வம்சத்தின் தலைசிறந்த புகழின் உச்சநிலையை அடைந்த மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகன் ராஜேந்திர சோழன்.tamilspark

ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி சிறந்த போர்வீரர் ஆவார். கணவருக்கு ஆட்சியில் பக்கபலமாக இருந்தவர். இந்நிலையில் ராஜேந்திர சோழனின் இறப்புக்கு பிறகு குல வழக்கின்படி சதி என்னும் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக்கொண்டவர்.

இந்நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வீரமாதேவி என்ற படம் உருவாகி வெளிவர தயாராக இருக்கிறது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆபாச படங்களில் நடித்து சிறந்த ஆபாச நடிகை என்று பெயர் வாங்கிய நடிகை சன்னி லியோன் ராணி வீரமா தேவி கதாபாத்திரத்தில் அடிக்க தகுதியற்றவர். 

tamilspark

எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அதில், நடிகா், நடிகைகள் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். இம்மனு பொதுநல வழக்கில் வராது. இதுபோன்ற மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீா்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதனைத் தொடா்ந்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரா் தொிவித்தாா். அதன்படி வீரமாதேவி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க தடையில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.