திருமணத்தின் போது ரன்வீர்சிங்கின் திருமண உடையை கிழித்த உறவினர்கள்! என்ன காரணம் தெரியுமா?



Ranveer singh relatives dare ranveer clothes while his wedding

டென்மார்க்கில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் தீபிகா படுகோன். 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். மேலும் பல விளம்பரப் படங்களிலும் நடத்து புகழ் பெற்றவர் தீபிகா. பாலிவுட்டில் தன்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

32 வயதான தீபிகா படுகோனும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் இத்தாலியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது .

திருமணத்திற்கு மீடியாக்கள் எதுவம் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இவர்களது திருமண புகைப்படங்கள் ஏந்துவம் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் நேற்று தங்களது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகை தீபிகா.

இந்நிலையில் மணமகன் ரன்வீரின் உடைகளை அவரது உறவினர்கள் கிழிப்பது போன்று ஒருபுகைப்படம் வெளியானது. சிந்தி திருமண முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது. அதில் மணமகனின் உடைகளை உறவினர்கள் கிழிப்பது வழக்கம். அதற்காகத்தான் இப்படி செய்துள்ளனர்.