மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேலையில் தங்கம் போல் மின்னும் நடிகை ராஷ்மிகா மந்தானா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியானதை தொடர்ந்து 'புஷ்பா 2' தெலுங்கில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்தியில் 'அனிமல்' என்ற திரைப்படத்தில் ரன்பீர் கபூர்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வரும் நடிகை ராஷ்மிகா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது சேலையில் அழகு தேவதையாய் தங்கம் போல் மின்னும் ராஷ்மிகாவின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.