மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நாங்க பிரிஞ்சி இத்தனை மாசம் ஆகுதா?" தயாரிப்பாளர் ரவீந்தரின் உருக்கமான பதிவு.!
தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மஹாலக்ஷ்மி. இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமடைந்தவர்.
இதேபோல் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். கடந்த வருடம் ரவீந்தர்-மஹாலக்ஷ்மி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்கள் இரண்டாவது திருமணத்தை மிகவும் எளிமையாக செய்துகொண்டனர்.
இவர்களது திருமணம் இணையதளத்தில் அதிகம் பேசப்பட்டது. இருவரது தோற்றம், அழகை ஒப்பிட்டு பலரும் இப்போதும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தங்களது முதல் ஆண்டு திருமண நாளில் ரவீந்தர் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "எங்களுக்கு திருமணமாகி ஒருவருடம் ஓடிவிட்டது. இதை எப்படி சொல்ல வேண்டும்? திருமணம் ஆகி 11 மாதங்களாக எங்களை பற்றி தான் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் 2ஆவது மாதத்திலேயே பிரிந்துவிட்டோம் என்று கூறினார். ஆனால் நாங்கள் வாழ்ந்து காட்டுவோம்" என்று ரவீந்தர் கூறியுள்ளார்.