மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. வேற லெவல் என்ட்ரி! பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், அதிரடித் திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக வினுஷா தேவி ஆகியோர் நடித்து வருகின்றனர். அந்த தொடர் தற்போது மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் ஆர்வத்துடன் அதனை கண்டு வருகின்றனர்.
இது நம்ம list-லியே இல்லையே பா! 😱
— Vijay Television (@vijaytelevision) April 8, 2022
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/oedK2ZDpNq
இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடரை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய பிரபலம் ஒருவர் அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது பிரபல முன்னணி நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரேகா இந்த சீரியலில் இணைந்துள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.