மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் ரித்விகாவா இது! ஹேர்ஸ்டைலாம் மாத்தி புதிய லுக்கில் சும்மா அசத்துறாரே! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பரதேசி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரித்விகா. அதனைத் தொடர்ந்து அவர் மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அப்படத்தைத் தொடர்ந்து ரித்விகா கபாலி, ஆறுமுன், இசை, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப்போர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ரித்விகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளே கிடைத்தது.
Candid 📸 pic.twitter.com/ncwGGLxCuk
— Riythvika✨ (@Riythvika) October 23, 2020
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ரித்விகா குடும்பப்பாங்காகவே, கண்ணியமாக உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுவந்த நிலையில், தற்போது செம மாடர்னாக மாறிவருகிறார். இந்த நிலையில் ரித்விகா சமீபத்தில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வித்தியாசமான லுக்கில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ரித்விகாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.