மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது போதுங்க..வேற லெவல் வலிமை சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபல நடிகர்! செம்ம எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இது அஜித்தின் 60வது திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் வலிமை திரைப்படத்தில் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் பெருமளவில் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மே 1 அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. பின் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி வரும்நிலையில் அதுவும் தள்ளிப்போனது. இதனால் தல ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வலிமை படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, வலிமை படத்தில் அஜித் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். அவரது திரைவாழ்க்கையில் வலிமை ஒரு சிறந்த முக்கிய படமாக அமையும். அதுமட்டுமின்றி ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு தானே கொண்டுவரும் படமாகவும் அமையும் என கூறியுள்ளார்.