ஆருத்ரா பண மோசடி வழக்கு; டிசம்பரில் நாடு திரும்புகிறேன் - நீதிமன்றத்தை நாடிய ஆர்.கே சுரேஷ்.!



RK Suresh Return India Dec 10 2023 

 

ஆருத்ரா நகை கடன் மோசடி விவகாரத்தில், பல அரசியல் புள்ளிகள் அடுத்தடுத்து சிக்கிவரும் நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே சுரேஷ் மத்திய பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்படும் சாத்தியக்கூறு நிலவியது. 

இதனையடுத்து, ஆர்.கே. சுரேஷ் வெளிநாடு சென்றுவிடவே, வழக்கில் தொடர்புடைய பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களிடம், ரூ.1 இலட்சத்துக்கு 30% வட்டி என, மாதம் ரூ.30 ஆயிரம் பணம் தருவதாக கூறி பலஇலட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டனர். 

இவன் வாயிலாக ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி வசூல் செய்து தலைமறைவானது. இதுகுறித்த புகாரின் பேரில் 21 பேரின் மெது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரூசோ என்பவர் ஆருத்ரா நிறுவன விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, அவரிடம் நடந்த விசாரணையின்பேரில் ஆர்.கே-வுக்கு சம்மன் வழங்கப்பட்டது. 

ஆனால், அவரோ படத்தயாரிப்பு தொடர்பாக மட்டுமே ரூசோ என்னை அணுகினார். அதுகுறித்த பரிவர்த்தனை மட்டுமே நடந்தது என விளக்கம் அளித்தார். ஆனால், மத்திய பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. 

இதனால் தற்போது அவருக்கு எதிராக அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்தனர். இந்த நிலையில், தான் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி நாடு திரும்புவதாகவும், தனக்கு எதிரான லுக்கவுட் நோட்டீஸ் இரத்து செய்யப்படவேண்டும். லுக்கவுட்டுடன் நாடு திரும்பினால் கைது செய்யப்படலாம் என்பதால், தனக்கு எதிரானது நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

அவரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ஆர்.கே சுரேஷ் நாடு திரும்பியதும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வார் எனவும் கூறியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.