மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆர்.கே சுரேஷின் 'காடுவெட்டி' திரைப்படம் டிரைலர் வெளியீடு; லிங்க் உள்ளே.!
சோலை ஆறுமுகம் இயக்கத்தில், ஆர்.கே சுரேஷ், சங்கீர்த்தனா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, ஷர்மிளா, சுப்ரமணியன் சிவா, விஸ்மயா, ஜெயம் எஸ்கே கோபி, அகிலன், உட்பட பலர் நடிththu உருவாகியுள்ள திரைப்படம் காடுவெட்டி நடுநாட்டுக்கதை.
அரியலூர் மாவட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு வணக்கம் தமிழா சாதிக் இசையமைத்து இருக்கிறார். மஞ்சள் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்குகிறது.
எம்.புகழேந்தி ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங்கில், கே. வீரசமர் கலை வடிவமைப்பில், கனல் கண்ணன் சண்டை காட்சிகளுடன் படம் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
"பயப்படுறதுதான் எங்களுக்கு மரணம்" என்ற வசனத்துடன் அனல்பறக்க, இரத்தம் தெறிக்க காடுவெட்டி படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நகை மோசடி விவகாரத்தில் விசாரணை வளையத்திலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.