அதை கேட்டதும் எனக்கு கண்ணீரே வந்து விட்டது... பார்த்திபன் மைக் எறிந்தது பற்றி மனம் திறந்த ரோபோ சங்கர்!!



Robo Sankar explain about parthiban activity

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் ஒரே ஷாட்டில் 96 நிமிடங்கள் படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 

இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

parthiban

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் பற்றி ரோபோ ஷங்கர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் பேசவேண்டிய நேரத்தில் சரியாக ஆடியோ எஞ்சினியர் மைக்கை ஆப் செய்துவிட்டார். நானும் எவ்வளவோ போராடி பார்த்தேன். இந்த மைக்கிலாவது பேசுங்க என தூக்கி கொடுத்தது தான் அது. அதை நான் பிடிக்காமல் விட்டதால் நடந்தது அது என விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் பார்த்திபன் ரோபோ சங்கருக்கு வாய்ஸ் நோட் ஒன்றை அனுப்பியிருந்தாராம். அதை கேட்டதும் ரோபோ சங்கருக்கு கண்ணீரே வந்து விட்டதாம். அவ்வளவு சாரி கேட்டிருக்கிறார் என கூறியுள்ளார்.