மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோஜா சீரியலில் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் -யார் அவர் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்தான் ரோஜா.இத்தொடர் ஏப்ரல் 9, 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டது .அதுமுதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பகிய இத்தொடர் மதிய நேரதொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் பிடித்தது .
எனேவ மார்ச் 18 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது . குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட இந்த மெகா தொடரில் புதுமுக நடிகர் சிபு சூர்யன் அர்ஜூனாகவும் மற்றும் புதுமுக நடிகை பிரியங்கா ரோஜா மற்றும் அணுவாக நடிக்கின்றார்கள்.இதில் சௌமியா, ராஜேஷ், வடிவுக்கரசி, காயத்திரி சாஸ்திரி என பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரை சரிகம என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது புதிதாக இந்த சீரியலில் திரைக்கதை ஆசிரியராக விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவி பத்மாவதி இணைந்துள்ளார். எழுத்தாளரான இவர் பெண்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காவும் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
சென்ற வாரம் முதல் சன் தொலைக்காட்சி ரோஜா தொடரில்
— WriterVPadmavathy (@padmavathyvae) 21 August 2019
திரைக்கதை ஆசிரியராக....மகிழ்ச்சியும் சந்தோஷமும் நன்றி @SunTV pic.twitter.com/XwtAi2ItFb