மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட சாய் பல்லவி.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் சாய் பல்லவி.
இதனைத் தொடர்ந்து தமிழில் மேலும் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சாய்பல்லவி தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.