மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யின் லியோ படத்தில் ஹீரோயினாக நடிக்க மறுத்த பிரபல நடிகை.! என்ன காரணம்?? பரவும் தகவல்!!
வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து வரும் லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். மேலும் இதில் ஹீரோயினாக பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் திரிஷா இணைந்துள்ளார்.இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க லோகேஷ் முதலில் சாய் பல்லவியை தான் அணுகினாராம். ஆனால் தனக்கான கதாபாத்திரம் வலுவாக இல்லாத நிலையில் அந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.