மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாறுவேடத்தில் யாருக்கும் தெரியாமல் சென்று சாய் பல்லவி செய்த காரியத்தை பார்த்தீங்களா.! ஷாக்கான ரசிகர்கள்!!
மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மிகவும் சிம்பிளாக இருக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் இது பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த லவ் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சாய் பல்லவி நடிகர் நானி இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'ஷ்யாம் சிங்கா ராய்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ராகுல் சங்ரித்யன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்தத் திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஷியாம் சிங்கா ராய் படத்தை சாய் பல்லவி ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் புர்கா அணிந்து சென்று ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.