மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்க்காரை பார்த்த விஜய் ரசிகர் தனது அரசு வீட்டை இடித்து தள்ளும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.!
சர்க்கார் படத்தை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் அரசு இலவசமாக கட்டிக்கொடுத்த தனது வீட்டை இடித்து தள்ளும் வீடியோ காட்சி வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் சர்க்கார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் எதிர்காலத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விதமாக பேசியது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அதேவேளையில் அரசியல் கட்சியினர் குறிப்பாக ஆளும் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தில் அரசு வழங்கியுள்ள இலவச பொருட்களை விமர்சித்தும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை கோமளவள்ளி என்று வைத்துள்ளதாகவும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த காட்சிகளை நீக்க வைத்தனர்.
#Sarkar படம் பார்த்து விட்டு இலவச வீட்டை இடித்து தள்ளிய விஜய் ரசிகர்
— சிந்தனைவாதி🇮🇳 (@PARITHITAMIL) November 12, 2018
# ஒரு சினிமா மக்களிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டு சினிமா இயக்குனர்கள் இனியாவது திருந்துவார்களா? pic.twitter.com/NxIzJjmOAk
இதனிடையே விஜய் ரசிகர்கள், தமிழக அரசுக்கு எதிராக தங்கள் வீடுகளில் இருந்த லேப்டாப், மிக்சி. கிரைண்டர், பேன் உள்ளிட்ட இலவசப் பொருட்களை தூக்கி எறிந்தனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர், அரசாங்கம் கட்டிக்கொடுத்த இலவச வீட்டையை தரைமட்டம் ஆக்குவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.