அம்மாடியோவ்.. இவ்வளவா! ஜெயம் ரவியுடன் நடிக்க நயன் கேட்ட சம்பளம்! ஆடிப்போன ரசிகர்கள்!!



salary-for-nayanthara-to-act-in-jeyam-ravi-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. இவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

nayanthara

இந்த நிலையில் அப்படத்தில் நடிக்க நயன்தாரா 10 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. படத்தில் நடிக்க அவர் 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா இதற்கு முன்பு நடித்த படத்தில் 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.