மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹிந்தியில் ரீமேக்காகும் தளபதியின் மாஸ்டர் திரைப்படம்! ஹீரோவாக நடிக்கப்போவது யார்னு பார்த்தீர்களா! குஷியான ரசிகர்கள்!!
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் அவர்களுடன் ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தநிலையில் கொரோனா பரவலால் திரையரங்குகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் படம் ரிலீஸாவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் மாஸ்டர் படம் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. இதில் ஹீரோவாக விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் நடிகர் சல்மான்கான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.