மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விஷயத்தில் சமந்தா எடுத்த அதிரடி முடிவு.! அடடே ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். இந்த நிலையில், திருமணமாகி, 4 வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்காக சிகிச்சை எடுத்து வருகின்றார். இதன் காரணமாக, சினிமாவிலிருந்து தற்காலிகமாக அவர் விலகி இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் தான், நடிகை சமந்தா பிரதியுஷா என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக அவர் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றார். தற்போது அந்த நிறுவனத்தின் மூலமாக சமந்தா இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் காரணமாக, சமந்தா 2வது திருமணத்தை செய்வதற்கான வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.