நடிகை சமந்தாவின் மொத்த சொத்துமதிப்பு இத்தனை கோடியா? சொகுசு கார் மட்டும் இத்தனையா! வெளிவந்த தகவல்!!



Samantha property value details viral

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதல் கணவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் தனியாக வாழ்ந்து வரும் அவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ..சொல்றியா மாமா என்ற ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் இதன் மூலம் அவர் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பினார். மேலும் தற்போது சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதீஜாவான சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

samantha

இந்த நிலையில் தற்போது சமந்தாவின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது ஒரு படத்திற்கு 3 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் சமந்தாவின் சொத்து மதிப்பு தோராயமாக 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவர் ஹைதராபாத், சென்னை மற்றும் பல பகுதிகளில் வீடு வாங்கியுள்ளதாகவும், அவரிடம் BMW 3 series, BMW X5 and Jaguar XFR y என மூன்று சொகுசு கார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.