மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு...தேதி மாற்றப்பட்டதற்கு சமந்தா தான் காரணமா!?
பிரபல முன்னணி நடிகையான சமந்தா பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகையாக இருக்கிறார். இவர் நடித்து இறுதியாக வெளிவந்த யசோதா என்ற தெலுங்கு திரைப்படம் பல மொழிகளில் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது இவரது நடிப்பில் வெளியாகி இருக்கிறது சாகுந்தலம் படம்.
காளிதாசன் எழுதிய 'சாகுந்தலம்' என்ற காவியத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமே சமந்தா நடிக்கும் சாகுந்தலம். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, கபீர் சிங், மோகன் பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த சாகுந்தலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, வெளியாகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேதி மாற்றப்பட்டது. தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் படம் வெளியாகவில்லை என ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மொத்த படத்தையும் 3D தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதாக படக்குழு கூறியது. தொடர்ந்து, இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீசாகவுள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதால் இந்த முறையாவது படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.