விவாகரத்தான காஜலுக்கு இப்படியொரு வினோத ஆசையா! பிரபல டிவி சேனலுக்கு விடுத்த கோரிக்கையை பார்த்தீர்களா!!



sandy-wish-to-zee-tamil

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது திரைபயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. அதனைத் தொடர்ந்து அவர் வசூல்ராஜா, டிஷ்யூம், கள்வனின் காதலி, ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்..
மேலும் சின்னத்திரை தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். அவர் பிரபல நடன இயக்குனரும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார். அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

           Sandy

 

இருப்பினும் அவர் சாண்டியின் இரண்டாவது மனைவி மற்றும் அவரது குழந்தையை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஆதரவாகவும் பல கருத்துகளை தெரிவித்து வந்தார். 

 இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் காஜல் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சூப்பர் மாம், டான்ஸ் ஜோடி போன்ற நிகழ்ச்சியை குழந்தை இருப்பவர்களுக்கும்,கணவருடன் இருப்பவர்களுக்கும் நடத்துவது போன்று என்னைப்போல விவாகரத்து ஆனவர்களுக்கும் முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தலாமே என ஜீ தமிழ் தொலைக்காட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். .