மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய், சர்க்கார்! இந்த ஆண்டில் இந்த இரண்டு வார்த்தைகள் படைத்த சாதனைகள் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் தளபதி என்றால் அது நம்ம விஜய்தான். நாளைய தீர்ப்பில் தொடங்கிய இந்த சினிமா பயணம் இன்று சர்க்கார் வரை வளர்ந்து நிற்கிறது. பல வெற்றி, தோல்வி என அனைத்தையும் தாண்டி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார் விஜய்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் சர்க்கார். சர்க்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், அதேசமயம் பல்வேறு சாதனைகளையும் படைத்தது. சுமார் 3 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு விரல் புரட்சி பாடல் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாடல் என்ற என்ற சிறப்பை பெற்றுள்ளதாக பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் , இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் 8வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகர் பட்டியலில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு மட்டும் 9 வது இடத்தில் மகேஷ் பாபு இருக்கிறார். மேலும் இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் சர்கார் படமும் இரண்டாவது இடத்தில் #MeToo இயக்கமும் இடம்பெற்றுள்ளது