இவ்வளவுதான் சர்க்கார் படத்தின் கதையா? இணையத்தில் வெளியானது முழு கதை!



sarkar-movie-story-leaked

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் பிரமாண்ட திரைப்படம்தான் சர்க்கார். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி சர்க்கார் படத்திற்கான இசைவெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சர்க்கார் படத்தில் பணிபுரிந்த சில பணியாளர்களிடம் இருந்து கதை வெளியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sarkar movie

சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் மிகப்பெரிய அரசியல் வாதியாக நடிக்க இருப்பதாக அனைவரும் நினைத்து வருகின்றனர். ஆனால் படத்தில் விஜய் அரசியல் வாதியாக நடிக்கவில்லை என்றும் மாறாக மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்திவரும் விஜய் நாட்டை யார் ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதுவும் தகவல்கள் கூறுகின்றன.


அதாவது உலக அளவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றியும், இந்திய அளவில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பெற்ற வெற்றியும்தான் 'சர்கார்' கதையின் ஆணிவேர்.

ட்ரம்ப், மோடி ஆகிய இருவரும் தனியார் விளம்பர நிறுவனத்தின் மூலமாக அனைத்துத் தளங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டனர். இவர்தான் எதிர்காலம் என்று அனைத்து தரப்பு மக்களயும் நம்பி மயங்கவைத்தன அந்த விளம்பரங்கள்.

Sarkar movie
இவாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு அரசியல் வாதிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவருகின்றனர், அவர்களை எவ்வாறு முன்னிலை படுத்துகின்றனர் என்பதுதான் கதையாம். படத்தின் முதல் பாகத்தில் ஒன்றும் இல்லாத அரசியல் வாதியை விஜய் முதலமைச்சர் ஆக்குகிறாராம். படத்தின் இராண்டாம் பாகத்தில் அதே அரசியல் ஒன்றும் இல்லாதவராக மாற்றுகிறாராம். இதான் படத்தின் கதை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.


அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைத்தது மீதி இருக்கும் கேப்பில் விஜய்க்கு டூயட்டும், யோகிபாபுவின் காமெடிகளும் தேவையான அளவு இடம்பெற்றிருக்கின்றன என்கிறார்கள்.