மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்துருக்கீங்களா.! இணையத்தை கலக்கும் கியூட்டான இளவயது புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து 80ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் சத்யராஜ். இவர் கொடூர வில்லனாகவும், நக்கல், காமெடி மற்றும் காதலில் அசத்த கூடிய ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு சிபிராஜ் மற்றும் திவ்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சிபிராஜ் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம் வருகிறார். மற்றும் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். சத்யராஜ் தற்போதும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் உலக மகளிர் தினமான இன்று சத்யராஜின் மகள் திவ்யா தனது அம்மாவின் புகைப்படங்களை பகிர்ந்து அவரைக் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பதிவினை வெளியிட்டுள்ளார். சத்யராஜ் மற்றும் மகேஸ்வரி இருவரும் இளமைக்காலத்தில் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.