மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ரஜினி, ரசிகர்களுக்கு ஒரு வேளை சோறு கூட போட மாட்டார் அவர் கூட எல்லாம் விஜயை கம்பேர் பண்ணாதீங்க" பிரபலத்தின் பேச்சால் இணையத்தில் சர்ச்சை..
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி அனைத்து ரசிகர்கள் மனதிலும் கேட்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். ரஜினிகாந்த் அடிக்கடி அரசியலுக்கு வருவதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிவிட்டு பின் மறுத்து பேசுவார்.
இதன்படி தற்போது நடிகர் விஜய் தனது சினிமா வாழ்க்கையில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும்போதே அரசியல் பக்கமும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதன் முதன் வேலையாக 10th மற்றும் 12th படிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது.
இதன் பின்பு விஜயின் பிறந்தநாளன்று பல்வேறு நிகழ்ச்சிகள், சேவைகள் செய்யப்பட்டன. இதனை அடுத்து விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி விஜயின் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டது. தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்பு விஜயின் முடிவு என்ன என்று கூறப்படும் என்று திரை வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில், சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் "ரஜினியும், விஜயும் ஒன்று சேர்த்து பேசாதீங்க. ரஜினி ரசிகர்களுக்கு ஒருவேளை சோறு கூட போட மாட்டார். ஆனால் விஜய் அப்படி இல்லை என்று கூறியிருக்கிறார். இப்பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு முன்னதாக விஜயை குறித்து பல தவறான விஷயங்களை சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். இவர் திடீரென்று இவ்வாறு பேசுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.